×

அருணாச்சல் முதல்வருக்கு என்சிபி எம்எல்ஏக்கள் ஆதரவு

இடாநகர்: அருணாச்சலப்பிரதேசத்தில் முதல்வர் பெமா காண்டு தலைமையிலான பாஜ அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை(அஜித் பவார்) சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் பாஜ அரசுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக எம்எல்ஏக்கள் நிக் காமினி, லிகா சோனி மற்றும் டோகோ தாடங்க் ஆகியோர் நேற்று தங்களது நிபந்தனையற்ற ஆதரவு கடிதத்தை முதல்வர் பெமா காண்டுவை நேரில் சந்தித்து வழங்கினார்கள். ஆதரவு தெரிவித்துள்ள 3 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் முதல்வர் பெமா காண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

The post அருணாச்சல் முதல்வருக்கு என்சிபி எம்எல்ஏக்கள் ஆதரவு appeared first on Dinakaran.

Tags : NCP MLAs ,Arunachal ,Chief Minister ,Itanagar ,Arunachal Pradesh ,BJP government ,Pema Kandu ,Nationalist Congress Party ,Ajit Pawar ,Nick Kamini ,Lika Soni ,
× RELATED அருணாச்சல் முதல்வராக பெமா காண்டு 3வது முறையாக பதவிஏற்பு