×

நடுரோட்டில் கால்மேல் கால்போட்டு தூங்கிய குடிமகன் லாரி மோதி பலி: சமூக வலைதளங்களில் சிசிடிவி காட்சி வைரல்

இடைப்பாடி: குடிபோதையில் நடுரோட்டில் சாவகாசமாக கால் மீது கால் போட்டபடி படுத்திருந்த மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர் மீது, டேங்கர் லாரி ஏறியதில் தலை நசுங்கி பலியானார். சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே ஆலச்சம்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (22). மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர். திருமணம் ஆகாதவர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, வீட்டுக்கு பஸ்சில் வந்துள்ளார். கள்ளுக்கடை பகுதியில் இறங்கி டாஸ்மாக் கடையில் மது குடித்துள்ளார். இரவு 10 மணியளவில், போதை தலைக்கேறிய நிலையில், ரோட்டில் நடந்து சென்றபோது, தடுமாறி விழுந்துள்ளார். அங்கேயே போதை மயக்கத்தில் படுத்துக்கொண்டார்.

நடுரோட்டில் கால் மேல் கால் போட்டு ஹாயாக வீட்டில் படுத்திருப்பதுபோல படுத்திருந்தார். இரவு நேரம் என்பதால், சாலையில் அவர் படுத்திருப்பது அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை. அப்போது இடைப்பாடியில் இருந்து, மேட்டூர் சென்ற டேங்கர் லாரி, நடுரோட்டில் படுத்திருந்த சங்கர் மீது ஏறியதில், அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து டேங்கர் லாரி டிரைவரான பவானி அம்மாபேட்டையை சேர்ந்த மாதையன்(50) என்பவரை கைது செ்யதனர். டேங்கர் லாரியையும் பறிமுதல் செய்தனர். போதையில் நடுரோட்டில் படுத்திருக்கும் சங்கர் தலை மீது டேங்கர் லாரி ஏறிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post நடுரோட்டில் கால்மேல் கால்போட்டு தூங்கிய குடிமகன் லாரி மோதி பலி: சமூக வலைதளங்களில் சிசிடிவி காட்சி வைரல் appeared first on Dinakaran.

Tags : Ethapadi ,Mettur ,Shankar ,Alachampalayam ,Eadpadi, Salem district.… ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,341 கனஅடியாக உயர்வு..!!