×

பிரியாணியில் மண்; தட்டிக்கேட்ட தொழிலாளி வெட்டிக்கொலை

திருப்பூர்: திருப்பூர் கோல்டன் நகர் கருணாகரபுரி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு அருகே உள்ள பேக்கரியில் டீ குடித்துவிட்டு வெளியே அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் சதீஷ்குமாரை வெட்டி கொன்றது. விசாரணையில் திருப்பூர் கோல்டன்நகரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நேற்று முன்தினம் மதியம் சதீஷ்குமார் நண்பர்கள் சிலருடன் பிரியாணி சாப்பிட்டுள்ளார். அப்போது அந்த வழியாக பாலா, அவரது நண்பர்கள் நடந்து சென்றபோது சதீஷ்குமார் சாப்பிட்ட பிரியாணியில் மண் விழுந்ததாக தெரிகிறது. இதனை சதீஷ்குமார் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவர்கள் பிரியாணியில் எச்சில் துப்பியதாக கூறப்படுகிறது. வாக்குவாதத்துக்குப் பின்னர் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதில் கோபத்தில் இருந்த பாலா உள்பட 5 பேர் கொண்ட கும்பல் சதீஷ்குமாரை தேடி வந்த வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் பதுங்கியிருந்த பாலா என்ற பாலகிருஷ்ணன் (27), சக்தி சண்முகம் (26), பாண்டியராஜன் (25) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post பிரியாணியில் மண்; தட்டிக்கேட்ட தொழிலாளி வெட்டிக்கொலை appeared first on Dinakaran.

Tags : biryani ,Tirupur ,Satish Kumar ,Tirupur Golden Nagar, Karunakarapuri ,Banyan ,
× RELATED கள்ளச்சாராயம் விற்ற நபர் கைது