- சர்வதேச யோகா தினம்
- தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம்
- கமல் கிஷோர் மகன்
- சென்னை
- பொது இயக்குனர்
- ESIC
- தொழிலாளர் அரசாங்கம்
சென்னை: தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் சார்பில் நாளை சர்வதேச யோகா தினம் கொண்டாட்டப்படுகிறது. இதில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் தலைமை இயக்குனர் கமல் கிஷோர் சோன் பங்கேற்கிறார். இது குறித்து இ.எஸ்.ஐ.சி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்: தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், சர்வதேச யோகா தினத்தினை அனைத்து இ.எஸ்.ஐ.எஸ் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், இஎஸ்ஐசி மண்டல, துணை மண்டல மற்றும் கிளை அலுவலங்களில் நாளை கொண்டாட தயாராகி வருகிறது. இத்தினத்தினை சிறப்பிக்க, தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் தலைமை இயக்குனர் கமல் கிஷோர் சோன், சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறார். இந்த ஆண்டிற்கான சர்வதேச யோகா தினத்தினை கருப்பொருள் சுய மற்றும் சமூகத்திற்கான யோகா இக்கருப்பொருள் யோகா மூலம் நமக்கு கிடைக்கும் அனைத்து பயன்களையும் வலியுறுத்துகிறது. மேலும் இத்தினத்திற்க்கான கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தூய்மை இயக்கம், யோகா வகுப்புகள் மற்றும் யோகா செயல்விளக்கங்கள் போன்ற நிகழ்ச்சி நடைபெறும். இவ்வாறு இ.எஸ்.ஐ.சி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் சார்பில் நாளை சர்வதேச யோகாதினம் கொண்டாட்டம்: இயக்குனர் கமல் கிஷோர் சோன் பங்கேற்பு appeared first on Dinakaran.