×

ஆகாஷ் மாணவர்கள் ஜெஇஇ தேர்வில் சாதனை

சென்னை: ஆகாஷ் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு நடந்த ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வில், ஆகாஷ் பயிற்சி நிறுவனத்தில் படித்த 3,081 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 2,819 மாணவர்கள் பயிற்சி வகுப்பில் நேரடியாக சேர்ந்து படித்தவர்கள். அனைத்து இந்திய அளவிலான ரேங்க் பட்டியலில் முதல் 100 இடங்களில் 9 பேர், முதல் 500 இடங்களில் 46 பேர், முதல் 1,000 இடங்களில் 89 பேர் ஆகாஷ் பயிற்சி வகுப்பில் படித்தவர்கள் தான். ஆகாஷில் 2 ஆண்டுகள் படித்த ஐதராபாத்தை சேர்ந்த ரிஷி சுக்லா என்ற மாணவர், அகில இந்தி அளவில் 25வது இடம் பெற்றுள்ளார். இவர் ஜெஇஇ மெயின் தேர்வில் 300க்கு 300 பெற்றவர். தெலங்கானா மாநிலத்தில் மாநில முதலிடம் பிடித்தவர். கிருஷ்ணா சாய் ஷிஷிர் என்ற மாணவர் 4 ஆண்டுகள் ஆகாஷில் படித்து, ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் அகில இந்திய அளவில் 67வது இடம் பிடித்துள்ளார். இதுபோல் அகில இந்திய அளவில் அபிஷேக் ஜெயின் 78வது இடம், உஜ்வல் சிங் 95வது இடம், ராசித் அகர்வால் 98வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். ஆகாஷில் படித்து ஜெஇஇ அட்வான்ஸ் எழுதியவர்களில் 3ல் ஒருவர் தகுதி பெற்றுள்ளார்.

The post ஆகாஷ் மாணவர்கள் ஜெஇஇ தேர்வில் சாதனை appeared first on Dinakaran.

Tags : Akash ,CHENNAI ,Akash Training Institute ,
× RELATED விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி சங்கர் நடிக்கும் நேசிப்பாயா