×

புளூ கிராஸ் அமைப்பு வழக்கு: விலங்குகள் நல வாரியம் பதில் தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், புளூ கிராஸ் அமைப்புக்கு எதிரான புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், கடந்த பிப்ரவரி மாதம் திடீர் ஆய்வு நடத்தியது. அதில், புளூ கிராசில் பராமரிக்கப்படும் நாய், பூனைகளுக்கு முறையாக உணவளிக்கப்படுவதில்லை. முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்று அறிக்கை அளிக்கப்பட்டது.

உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் பெருமளவில் நிதி பெறும் புளூ கிராஸ், நிதி விவரங்களை வருமான வரித் துறை மூலம் தணிக்கை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் கே.குமரேஷ் பாபு அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், கால்நடைத் துறை, இந்திய விலங்குகள் நல வாரியம், வருமான வரித் துறை, புளூ கிராஸ் அமைப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.

The post புளூ கிராஸ் அமைப்பு வழக்கு: விலங்குகள் நல வாரியம் பதில் தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Blue Cross Organization ,Madras High Court ,Animal Welfare Board ,CHENNAI ,Tamil Nadu Animal Welfare Board ,Blue Cross ,Muralitharan ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED புளூ கிராஸ் அமைப்பை அரசு ஏற்று...