×

மது அருந்த கற்றுக்கொடுத்தார்… தகாத உறவுக்கு அழைக்கிறார்… எதிர் வீட்டு இளம்பெண் மீது கல்லூரி மாணவி பகீர் புகார்

அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது;
திருமங்கலத்தில் வாடகை வீட்டில் வசித்துக்கொண்டு சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் படித்து வருகிறேன். நான் தங்கியிருக்கும் வீட்டின் எதிரே வாடகை வீட்டில் 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண் வசிக்கிறார். இவர் தனக்கு அறிமுகமானதால் இருவரும் நட்பாக பழகினோம். இதன்பிறகு தனக்கு மது அருந்தும் பழக்கத்தை அந்த இளம்பெண் சொல்லி கொடுத்தார். இருவரும் மது அருந்தும்போது அந்த பெண், தன்னுடன் தகாத உறவில் ஈடுபடும்படி தொந்தரவு கொடுத்தார். எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் அந்த பெண்ணை கடுமையாக கண்டித்தேன். அத்துடன் அவருடன் பழகுவதை நிறுத்திவிட்டு மது அருந்துவதைகூட நிறுத்திவிட்டேன்.

இதன்காரணமாக அந்த பெண், தன்னை ஆபாசமாக திட்டியதுடன் என்னுடன் பழகாமல் போனால் உன்னை கொலை செய்துவிடுவேன் மிரட்டி வருகிறார். நான் பாத்ரூமில் குளிக்கும்போது எனக்கு தெரியாமல் வீடியோ எடுத்துக்கொண்டு அந்த வீடியோவை காட்டி என்னிடம் பழகாமல் போனால் இந்த வீடியோவை இணையதளம் மூலம் மற்றும் உன்னுடைய பெற்றோருக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டி வருகிறார். இதனால் பயந்துபோன நான் வீட்டை காலிசெய்வதற்கு வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து வைக்கும் போது அந்த பெண் வந்து என்னைவிட்டு பிரிந்து சென்றால் கொலை செய்துவிடுவேன் என்று மீண்டும் மிரட்டுகிறார். எனவே, அந்த பெண்ணால் என் உயிருக்கு ஆபத்துள்ளது. அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுபற்றி இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி விசாரணை நடத்திவிட்டு மிரட்டல் விடுத்த இளம்பெண்ணை அழைத்து விசாரணை நடத்தினார். இதில் புகார் கொடுத்த இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் தினமும் பாலியல் தொந்தரவு கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆபாசமாக பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்பட 5 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அந்த பெண், நீதிபதியிடம் எனக்கு சற்று மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது. என்னை மன நல மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்’’ என்று கூறி கதறி அழுதுள்ளார். இதன்பின்னர் அந்த பெண்ணை அயனாவரம் பகுதியில் உள்ள மன நல மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

The post மது அருந்த கற்றுக்கொடுத்தார்… தகாத உறவுக்கு அழைக்கிறார்… எதிர் வீட்டு இளம்பெண் மீது கல்லூரி மாணவி பகீர் புகார் appeared first on Dinakaran.

Tags : Bakeer ,Annanagar ,Chennai Thirumangalam ,Thirumangalam ,All Women Police Station ,Thirumangala ,Chennai ,
× RELATED குளித்தலை அண்ணாநகர் புறவழிச்...