×

காங்கிரசை கட்டி காக்க விடா முயற்சி செய்கிறார்; ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பாராட்டிய செல்லூர் ராஜூ: அதிமுகவில் மீண்டும் பரபரப்பு

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பை ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டோம். பாஜ, அதிமுக இடையே ஒட்டுமில்லை; உறவுமில்லை. விக்கிரவாண்டி தொகுதியில் தங்களுக்கான வாக்கு வங்கியை தெரிந்து கொள்ளவே பாமக போட்டியிடுகிறது. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்பர். காங்கிரசை கட்டி காக்க ராகுல்காந்தி விடா முயற்சி செய்து வருகிறார். அவருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டு தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

செல்லூர் ராஜூ ஏற்கனவே, ‘நான் பார்த்து ரசித்த இளம் தலைவர்களில் ராகுல் காந்தியும் ஒருவர் என தனது எக்ஸ்தளத்தில் பதிவிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் கட்சி தலைமை உத்தரவால், அந்த பதிவை நீக்கியதாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் ராகுல் காந்திக்கு செல்லூர் ராஜூ பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பாராட்டியிருப்பது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post காங்கிரசை கட்டி காக்க விடா முயற்சி செய்கிறார்; ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பாராட்டிய செல்லூர் ராஜூ: அதிமுகவில் மீண்டும் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,Cellur Raju ,Rahul Gandhi ,Madurai ,Former Minister ,Celluor Raju ,Madurai West Assembly Constituency Office ,Vikrawandi midterm elections ,Vikrawandi ,Vida ,
× RELATED காங்கிரஸ் கட்சியை கட்டிக்காக்க...