×

பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் புதிய உச்சம் தொட்டு சாதனை


வர்த்தகம் தொடங்கியவுடன் ஏற்ற இறக்கத்துடன் இருந்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் புதிய உச்சம் தொட்டு சாதனை படைத்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 36 புள்ளிகள் உயர்ந்து 77,338 புள்ளிகளானது. பிற்பகல் வர்த்தகத்தின் போது திடீரென பங்கு வர்த்தகம் விறுவிறுப்பு அடைந்ததால் பங்குச்சந்தை புதிய உச்சம் தொட்டது. வர்த்தகம் இடையே சென்செக்ஸ் 550 புள்ளி உயர்ந்து 77,851 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 106 புள்ளிகள் அதிகரித்து 23,664 புள்ளி என்ற புதிய உச்சத்தை எட்டியது. வர்த்தக நேரம் முடிவில் நிஃப்டி 42 புள்ளிகள் குறைந்து 23,516 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

The post பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் புதிய உச்சம் தொட்டு சாதனை appeared first on Dinakaran.

Tags : BSE Sensex ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 182 புள்ளிகள் உயர்வு..!!