×

சிறுமியை 2வது திருமணம் செய்தவர் போக்சோவில் கைது

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பொன்னிறை கீரந்தி கீழத்தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி அழகேசன் (42). இவருக்கு வாலண்டினா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் 17 வயது சிறுமியுடன் அழகேசனுக்கு பழக்கம் ஏற்பட்டது. மனைவிக்கு தெரியாமல் அந்த சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது தெரிந்ததும் அழகேசன் மீது திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வாலண்டினா புகார் செய்தார். போக்சோ சட்டத்தின்கீழ் அழகேசனை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post சிறுமியை 2வது திருமணம் செய்தவர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Pozzo ,Thiruthuraipundi ,Ponnirai Kiranti Lower Teru ,Thiruvarur district ,Valentina ,Boxo ,
× RELATED இடமாறுதலுக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம்...