கர்நாடகா: இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கர்நாடக மாநிலத்தில் சுமார் ரூ.1400 கோடி முதலீட்டில் குளிர்பான நிறுவனத்தை தொடங்க உள்ளார். சூழல் பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் இலங்கையில் குளிர்பானம் மற்றும் திண்பண்டங்களை தயாரிப்பு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தனது குளிர்பானத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள முரளிதரன் கர்நாடக மாநிலத்தில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டு அம்மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
இந்நிலையில் மென்பான நிறுவனம் தொடங்குவதற்காக முத்தையா முரளிதரன் கர்நாடகாவில் ரூ.1400 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அம்மாநில தொழிற்துறை அமைச்சர் எம்.பி.பார்ட்டில் தெரிவித்துள்ளார். சாமராஜ நகர் மாவட்டத்தில் உள்ள படனகோபே பகுதியில் 46 ஏக்கர் பரப்பளவில் முரளிதரனின் குளிர்பானம் மற்றும் தின்பண்டம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைய உள்ளது. முத்தையா விபேரேஜஸ் அண்ட் கன்பெக் ஷ்னரி என்ற பெயரில் தொடங்கப்பட உள்ள இந்த தொழிற்சாலை ஜனவரி 2025ல் தனது உற்பத்தியை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post கர்நாடகாவில் முதலீடு செய்துள்ள முத்தையா முரளீதரன்: ரூ.1,400 கோடி முதலீட்டில் மென்பான ஆலை தொடங்குகிறார் appeared first on Dinakaran.