×

கள்ளக்குறிச்சியில் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து எடுக்கும் பயோ மைனிங் இயந்திரத்தின் செயல்பாட்டினை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஒரு கோடி 75 மதிப்பிலான ஒப்பந்த அடிப்படையிலான நகராட்சி குப்பை கிடங்கில் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து எடுக்கும்  பயோ மைனிங் இயந்திரத்தின் செயல்பாட்டினை நேரில் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி நகராட்சியில் நெடுங்காலமாக மக்கும் மற்றும் மக்காத ஒருங்கிணைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த குப்பைகளை தற்போது  பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.   கள்ளக்குறிச்சி   நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருக்கின்ற மக்கும் மற்றும் மக்காத கழிவுகளை தரம் பிரித்து தீர்வு செய்வதற்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணியினை செயல்படுத்துவதற்கு இயந்திரங்கள் மூன்று நிலைகளைக் கொண்டு பொருத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.மேலும் உரக்கிடங்கு பகுதியில் செயல்படுத்தப்படும் பணியினை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்குமாறு கூறினார். அந்த வகையில் தற்போது குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளின் அளவு 26621 கன மீட்டர் ஆகும் இப்பணிக்கு பணி ஆணை வழங்கப்பட்டு ஓராண்டு காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் 2 9 2021 பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது பணி முடிக்கும் காலம் 1-9-22 ஆகும் இப்பணி தினசரி 250 கன சதுர மீட்டருக்கு தரம் பிரிக்கப் பட வேண்டும் இவ்வாறு தரம் பிரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் முறையாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைக்கப்படும் பிரித்தெடுக்கப்படும் இயற்கை உரங்கள் உரக்கிடங்கு சேர்த்து வைக்கப்பட்டு உரிய காலத்தில் விவசாயிகளுக்கு தேவைக்கேற்ப வழங்கப்படும் இதன் கடைசி பகுதியாக கல் மண் ஆகியவைகள் நகரப்பகுதிகளில் உள்ள மேடு பள்ளங்களை சரி செய்வதற்கு பயன்படுத்தப்படும் மேற்கண்ட இடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகள் அனைத்தும் உரிய காலத்தில் செய்து முடிக்கப்பட்டும் நகராட்சி ஆணையர் கூறினார்….

The post கள்ளக்குறிச்சியில் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து எடுக்கும் பயோ மைனிங் இயந்திரத்தின் செயல்பாட்டினை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் appeared first on Dinakaran.

Tags : District Collector ,Kallakurichi ,Sreedhar ,Kallakurichi District Collector ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறை தினத்தையொட்டி...