×

புதுக்கோட்டை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து: 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்தில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் காந்தர்கோட்டை அருகே புதுநகரில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி தரப்பில் இயக்கப்படும் வாகனங்கள் பல்வேறு கிராமங்களுக்கு சென்று மாணவர்களை ஏற்றி வருவது வழக்கம். அதேபோல் இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள கிராமங்களில் 30க்கு மாணவர்களை ஏற்றி சென்றுள்ளது.

இந்நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வையாபுரி குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். அப்போது அருகில் உள்ள பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களை மீட்டு மழையூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக 15 மாணவர்களும் சிறிய காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். மேலும் இந்த விபத்து குறித்து ஆதனக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post புதுக்கோட்டை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து: 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Pudukkottai ,Adhanakota, Pudukkottai district ,Pudukkottai district ,Kandarkot, Pudukkottai district ,Dinakaran ,
× RELATED சைக்கிள் ஓட்டினோம்… படிச்சோம்… சம்பாதிக்கிறோம்!