கோவை: பொள்ளாச்சி அருகே கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை கல்குவாரியில் வைத்து அடிக்க முயன்ற போது பயங்கர சத்தத்துடன் வெடித்து அருகில் இருந்த வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. பொள்ளாச்சி அடுத்த கோட்டூர், ஆணை மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் சட்ட விரோதமாக தோட்டங்களில் பதுக்கி வைத்திருந்த ஜெலட்டின் குச்சி உள்ளிட்ட வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை கோர்ட் உத்தரவின்படி பாலமநல்லூர் கிராமம் அருகே இயங்கிவரும் கல்குவாரியில் கோவை மாவட்ட வெடிகுண்டு செயலிழப்பு படை போலீசார் அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் வெடிபொருட்கள் வெடித்தது.
இதனால் பாலமநல்லூர் கிராமத்தில் வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு சுவர்கள் மேற்க்கூரைகளில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்தது. செய்வதறியாத கிராம மக்கள் சம்மந்தப்பட்ட கல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே இந்த கல்குவாரியில் இருந்து வரும் வெடிசத்தத்தால் நிம்மதியை இழந்து தவித்து வரும் நிலையில் தற்போது வீடுகளில் நிலா அதிர்வு ஏற்பட்டு வீடுகளில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக கிராமமக்கள் வேதனை தெரிவித்தனர். அபாயகரமான வெடி பொருட்களை கிராமத்திற்கு அருகே உள்ள குவாரிகளில் வெடிப்பதை அதிகாரிகள் எப்படி அனுமதித்தனர் என கேள்வி எழுப்பிய கிராமமக்கள் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
The post வீடுகளில் விரிசல்; பொள்ளாச்சியில் கல் குவாரியை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்: சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரிக்கை appeared first on Dinakaran.