×

கரூர் அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 வாலிபர்கள் பலி

 

குளித்தலை, ஜூன் 19: குளித்தலை அருகே சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (22). திருமணமாகவில்லை, இவர் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது தாய்மாமன் அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல் (32).நேற்று மாலை அய்யர்மலையில் இருந்து ஐயப்பன் மற்றும் அவரது தாய் மாமன் சக்திவேல் ஆகிய இருவரும் குளித்தலை- மணப்பாறை செல்லும் நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது எதிரே நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது, ஐயப்பன் சம்பவ இடத்திலேயே பலத்த ரத்த காயங்களுடன் உயிர் இழந்தார்.

பின்னால் அமர்ந்து வந்த சக்திவேல் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் குளித்தலை அரசு தலைமை மாவட்ட மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை ஆண்டியப்பா நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார் (28). இவர் தனது பைக்கில் கிருஷ்ணராயபுரம் அருகே திருச்சி, கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கட்டளை பிரிவு ரோடு பகுதியில் செல்லும்போது அதே திசையில் பின்னால் வந்த கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், சித்தலவாய் ஊராட்சி, மேல முனையனூர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஓட்டி வந்த கார் மோதியதில் படுகாயம் அடைந்தார்.

அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே உயிரிழந்தார். அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. விபத்து குறித்து அவரது தங்கை திவ்யா (30) கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கரூர் அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 வாலிபர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Karur ,Kulithalai ,Ayyappan ,Sathyamangalam ,Thaniyam, Trichy district ,Sakthivel ,Aiyarmalai ,Dinakaran ,
× RELATED கரூர் மாநகர பேருந்து நிலையத்தில்...