×

பாமாயில், பருப்பு வாங்காதவர்கள் 30ம் தேதிக்குள் பெறலாம்

 

தேனி, ஜூன் 19: தேனி மாவட்ட ரேசன் கடைகளில் மே மாதத்திற்குரிய பாமாயில், பருப்பு வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் வருகிற 30ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள மாவட்ட வழங்கல் துறை அனுமதி அளித்துள்ளது. தேனி மாவட்டத்தில் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் வழங்கப்படும் அத்தியாவசிய குடிமைபொருள்களுடன் சிறப்பு அத்தியாவசிய பொருட்களான பாமாயில் மற்றும் பருப்பு ஆகியவையும் வழங்கப்பட்டு வருகின்றன.

மே மாதத்தில் அத்தியாவசிய பொருள்களான பாமாயில் மற்றும் பருப்பு ஆகியவை பெற்றுக்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் வருகிற 30ம் தேதிக்குள் அந்தந்த ரேசன் கடைகளில் பாமாயில் மற்றும் பருப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என தேனி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

The post பாமாயில், பருப்பு வாங்காதவர்கள் 30ம் தேதிக்குள் பெறலாம் appeared first on Dinakaran.

Tags : Theni ,Dinakaran ,
× RELATED நிதி நிறுவனம் ₹6 கோடி மோசடி: தேனி குற்றப்பிரிவில் புகார்