×

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

தேனி, ஜூன் 19: தேனி அருகே தங்கதமிழ்ச்செல்வன் எம்.பி முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர். தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சி உள்ளது. இப்பேரூராட்சியை சேர்ந்த அதிமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், அந்தக் கட்சிகளில் இருந்து விலகி முத்து, ஊர்க்காலன் தலைமையில் நேற்று தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்செல்வன் எம்.பி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை போடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் அய்யப்பன், பூதிப்புரம் பேரூராட்சி சேர்மன் கவியரசு செய்தனர். இதில் பேரூராட்சி துணை சேர்மன் பொன்னையன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

The post திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர் appeared first on Dinakaran.

Tags : DMK ,Theni ,Thangatamhilchelvan ,Bhutipuram Municipality ,AIADMK ,AAMUK ,Muthu ,Dinakaran ,
× RELATED தேனி எம்பி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்