×

கோவில்பட்டியில் குடோனில் புகையிலை பதுக்கிய வடமாநில வாலிபர் கைது

கோவில்பட்டி, ஜூன் 19: கோவில்பட்டியில் குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக டிஎஸ்பி வெங்கடேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் கிழக்கு காவல்நிலைய எஸ்ஐ செந்தில்வேல்முருகன் மற்றும் போலீசார், பசுவந்தனை ரோட்டில் உள்ள குடோனில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3 மூட்டைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசா ராம் சவுத்ரி மகன் ஹிராராம் சவுத்ரி (26) என்பவரை கைது செய்தனர். இவர், இங்குள்ள கடையில் வேலை பார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கோவில்பட்டியில் குடோனில் புகையிலை பதுக்கிய வடமாநில வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : North State ,Kovilpatti ,DSP ,Venkatesan ,East ,Station SI ,Senthilvelmurugan ,Pasuvanthanai Road.… ,State ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டியில் சாலையில் நின்றவர்கள் மீது மரம் விழுந்து பெண் காயம்