×

கடையநல்லூர் பகுதிகளில் இன்று மின்தடை ரத்து

கடையநல்லூர், ஜூன் 19:கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் உபமின் நிலைய பகுதிகளில் இன்று 19ம்தேதி நடைபெற இருந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் நிர்வாக காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,கடையநல்லூர் உபமின் நிலையத்தில் இன்று 19ம்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம் உள்ளிட்ட கோட்டத்திற்குட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று 19ம்தேதி நடைபெற இருந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் நிர்வாக காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்கம் போல் மின்விநியோகம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

The post கடையநல்லூர் பகுதிகளில் இன்று மின்தடை ரத்து appeared first on Dinakaran.

Tags : Kadayanallur ,Kadayanallur Division ,
× RELATED இந்திய யோகா அணிக்கு கடையநல்லூர் பள்ளி மாணவர் தேர்வு