×

ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

மானாமதுரை, ஜூன் 19: பரமக்குடி அருகே குறிச்சி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் ராதாகிருஷ்ணன் (36). ஜேசிபி ஆபரேட்டர். கோயில் திருவிழாவிற்கு வந்து விட்டு சென்னை செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார். கீழப்பசலை அருகில் ரயில் சென்றபோது, நிலை தடுமாறி விழுந்ததில் ராதாகிருஷ்ணன் உயிரிழந்தார். மானாமதுரை ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து உடலை கைப்பற்றி, பிரதே பரிசோதனைக்கு பின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

The post ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,Subramani Makan Radhakrishnan ,Kurichi village ,Paramakkudy ,JCB ,Sethu Express ,Chennai ,Keezapasalai ,
× RELATED 15 வயது மகள் காதல் கண்டித்த தந்தை கொலை: காதலன், நண்பர் கைது