×

உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியூ விளக்க வாயிற் கூட்டம்

உசிலம்பட்டி, ஜூன் 19: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு கிளைத் தலைவர் ராஜா தலைமையில் சிஐடியூ சார்பில் வாயிற் கூட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியூ மண்டல பொருளாளர் மாரியப்பன் துவக்கி வைத்தார். இதில் உசிலை சிஐடியூ ரவிக்குமார், கிளைச் செயலாளர் குமார், கிளை இணைச் செயலாளர் ஆசைக்கொடி, கிளை துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன், மத்திய சங்க துணைத் தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் மத்திய சங்க துணை பொதுச் செயலாளர் சந்திரசேகரன் நிறைவு செய்தார். கிளை துணைச் செயலாளர் சிவபாண்டியன் நன்றி உரையாற்றினார்.

The post உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியூ விளக்க வாயிற் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : CITU ,Usilambatti Traffic Workshop ,Usilambatti ,Raja ,Madurai ,District ,Government ,Transport ,Workshop ,Zonal Treasurer ,Mariyappan ,Usilai ,Ravikumar ,Usilampatti Traffic Workshop ,Dinakaran ,
× RELATED சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கம் மகாசபை கூட்டம்