×

காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்பு

உசிலம்பட்டி, ஜூன் 19: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டியைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (71). இவர் தனது பூர்வீக வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மகள்களின் வீட்டிற்கு வழக்கம் போல உணவு அருந்த வராததால் மூதாட்ட்சியின் மகள்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். ஆனால், அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று அதே ஊரைச் சேர்ந்த பழனி என்பவரது தோட்டத்தில் உள்ள 40 அடி கிணற்றில் உடல் அழுகிய நிலையில் செல்லம்மாள் பிணமாக கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை மற்றும் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் கிணற்றிலிருந்து மூதாட்டி செல்லம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

The post காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Usilambatti ,Chellammal ,Macillarpatti ,Madurai district ,
× RELATED உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியூ விளக்க வாயிற் கூட்டம்