×

ஓடை பாதையை மீட்க கோரி மறியல்

நிலக்கோட்டை, ஜூன் 19: நிலக்கோட்டை அருகே மைக்கேல்பாளையம் மேற்கு பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் தோட்ட குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக இங்குள்ள ஓடை பாதையை பயன்படுத்தி வந்தனர். சமீபத்தில் இதன் அருகேயுள்ள காலி இடத்தை வாங்கிய தனிநபர் ஒருவர், ஓடை பாதை தனக்கு சொந்தமானது எனக்கூறி ஜேசிபி மூலம் யாரும் செல்ல முடியாத அளவிற்கு பள்ளம் ேதாண்டி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஓடை பாதையை மீட்டு தர கோரி நேற்று அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நிலக்ேகாட்டை- செம்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த நிலக்கோட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்பே கிராமமக்கள் மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post ஓடை பாதையை மீட்க கோரி மறியல் appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,Michaelpalayam West ,
× RELATED நிலக்கோட்டையில் ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்