×

கொடைக்கானலில் இன்று மின்தடை

கொடைக்கானல், ஜூன் 19: கொடைக்கானல் துணை மின் நிலையம் மற்றும் உயர் அழுத்த மின் பாதைகளில் இன்று (ஜூன் 19ம் தேதி, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கொடைக்கானல், அட்டுவம்பட்டி, பள்ளங்கி, வில்பட்டி, பூம்பாறை, மன்னவனூர், பழம்புத்தூர், கவுஞ்சி, கிளாவரை, வடகவுஞ்சி, பெரும்பள்ளம், மேல்பள்ளம், சவரிக்காடு, ஊத்து, மச்சூர், பேத்துப்பாறை, பெருமாள் மலை, பிஎல் செட், சாமகாட்டு பள்ளம், சவரிக்காடு, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, குப்பம்மாள்பட்டி, கடைசி காடு, பெரியூர், பாச்சலூர், கேசி பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை வத்தலகுண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்தார்.

The post கொடைக்கானலில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் ஒரே இடத்தில்...