×

நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: நெல் கொள்முதல் விலையை குவிண்டால் ஒன்றுக்கு 3,500 ரூபாயாக உயர்த்த வேண்டுமென்பது விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 3,100 ரூபாயாக உயர்த்தியுள்ள நிலையில், குறைந்தபட்சம் இந்த அளவுக்காவது கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உழவுத் தொழில் நின்றுவிட்டால் எல்லா ஆசைகளையும் துறந்து விட்டோம் என்கிற துறவிகளுக்கும் வாழ வழியில்லை என்ற திருக்குறள் தான் நினைவிற்கு வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவும் கொள்முதல் விலையை உயர்த்த அரசு கொள்கை வகுக்க வேண்டும், முனைப்பு காட்ட வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடி கவனம் செலுத்தி, வருகிற சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, நெல் கொள்முதல் விலையை உடனடியாக குவிண்டால் ஒன்றுக்கு 3,500 ரூபாய் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : OPS ,CHENNAI ,Former ,Chief Minister ,O. Panneerselvam ,Odisha ,Dinakaran ,
× RELATED அதிமுக ஒன்று சேர வேண்டும் என்றால்...