×

10 ரூபா வேட்டி, 50 ரூபா சேலை விற்ற ஜவுளிக்கடைக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்-பொள்ளாச்சி நகராட்சி அதிரடி

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் தள்ளுபடி விலையில் வேட்டி, சேலை விற்பனை செய்த கடையில்   பொதுமக்கள் கூட்டம் சமூக இடைவெளியின்றி குவிந்தனர். இதையடுத்து கொரோனா   கட்டுப்பாடுகளை மீறிய கடைக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.பொள்ளாச்சி   கடைவீதியில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் நேற்று 100வது நாள்  விழாவையொட்டி சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டது. இதன்படி,  ரூ.50க்கு  சேலையும், ரூ.10க்கு வேட்டியும் வழங்கப்பட்டது. சேலை, வேட்டி  குறைந்த  விலைக்கு விற்பனை செய்யப்படுவதை அறிந்த பொதுமக்கள் கடை முன்பாக  காலை முதலே  கூடினர். கடை திறந்தவுடன் நெருக்கியடித்து கொண்டு, சமூக  இடைவெளியை  மறந்து கடைக்குள் ஓடினர். கொரோனா விதிமுறைகளை மீறி மக்கள்  கூட்டம்  அதிகளவில் முகக்கவசம் அணியாமல் கடைமுன் கூடி நிற்பது குறித்து  நகராட்சி  அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.பொள்ளாச்சி நகராட்சி  ஆணையாளர் தாணுமூர்த்தி உத்தரவின்பேரில், அங்கு சென்ற நகராட்சி சுகாதார  ஆய்வாளர்கள்  தர்மராஜ், செந்தில்குமார் உள்ளிட்டோர் கடைக்கு முன் நின்று  ஆய்வு  மேற்கொண்டனர். அப்போது, கொரோனா விதிமுறைகளை மீறி, கடையில் அதிக  அளவில்  பொதுமக்கள் கூட்டம் கூடி இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து  நோய் கட்டுப்பாட்டு விதிகளை மீறி செயல்பட்ட தனியார் ஜவுளிக்கடைக்கு  நகராட்சி  அதிகாரிகள் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். பொள்ளாச்சியில்  நோய்  தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நோய் கட்டுப்பாட்டு  விதிகளை  மீறி செயல்படும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை  எடுக்கப்படும்  என்றும் நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்….

The post 10 ரூபா வேட்டி, 50 ரூபா சேலை விற்ற ஜவுளிக்கடைக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்-பொள்ளாச்சி நகராட்சி அதிரடி appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Rupa Vetti ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...