×

ஒடிசா சட்டப்பேரவையில் ருசிகரம் ‘ஓ, நீங்கள் என்னை தோற்கடித்தவர் தானே?’ பா.ஜ எம்எல்ஏவிடம் நவீன்பட்நாயக் உரையாடல்

புவனேஸ்வர்: ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ வென்று ஆட்சியை பிடித்தது. இதனால் 24 ஆண்டுகள் முதல்வராக இருந்த நவீன்பட்நாயக் பதவி விலகினார். நேற்று சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. 2 தொகுதிகளில் போட்டியிட்ட பட்நாயக் தனது ஹின்ஜிலியில் வென்ற நிலையில், கன்தாபன்சி தொகுதியில் பாஜ வேட்பாளர் லட்சுமண் பாகிடம் தோல்வியை சந்தித்தார்.

நேற்று எம்எல்ஏ பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது சட்டமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் முடித்துவிட்டு நவீன்பட்நாயக் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது பா.ஜ எம்எல்எ லட்சுமண் பாகி எழுந்து நின்று வணக்கம் தெரிவித்து,’ எப்படி இருக்கிறீர்கள்?’ என்று விசாரித்தார். அவரைப்பார்த்து வணக்கம் தெரிவித்த பட்நாயக்,’ ஓ, நீங்கள்தானே என்னை தோற்கடித்தீர்கள்?’ என்று கேட்டார்.

The post ஒடிசா சட்டப்பேரவையில் ருசிகரம் ‘ஓ, நீங்கள் என்னை தோற்கடித்தவர் தானே?’ பா.ஜ எம்எல்ஏவிடம் நவீன்பட்நாயக் உரையாடல் appeared first on Dinakaran.

Tags : Naveen Patnaik ,BJP MLA ,Bhubaneswar ,BJP ,Odisha assembly ,Chief Minister ,Assembly ,Patnaik ,Odisha ,
× RELATED நாடாளுமன்றத்தில் இனி பாஜவுக்கு ஆதரவு இல்லை: நவீன் பட்நாயக் அறிவிப்பு