×

கோயில் உண்டியல் திருட்டு

அயோத்தியாப்பட்டணம், ஜூன் 19: அயோத்தியாப்பட்டணம் அடுத்த சின்னகவுண்டாபுரம் பகுதியில், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கும்பத்து மாரியம்மன், மதுரை வீரன் கோயில் திருவிழா, கடந்த 29ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், நேற்று காலை கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த கிடப்பதை பார்த்து அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் நள்ளிரவில் கோயில் உண்டியலை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலின் பேரில் காரிப்பட்டி போலீசார் அங்கு சென்று, கைரேகைகளை பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து, கோயில் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post கோயில் உண்டியல் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Ayodhyapatnam ,Kumpathu Mariamman ,Madurai Veeran Temple Festival ,Chinnagaundapuram ,Salem-Chennai National Highway ,29th ,
× RELATED பிடிஓ அலுவலகத்தை பாமகவினர் முற்றுகை