×

பவானிசாகர் வனப்பகுதியில் யானை உயிரிழப்பு

சத்தியமங்கலம், ஜூன் 19: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை ஊழியர்கள் அவ்வப்போது வனப்பகுதிக்குள் ரோந்து செல்வது வழக்கம். இதற்கிடையே சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பவானிசாகர் வனச்சரகம் சுஜில்குட்டை வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் ஓரிடத்தில் ஒரு யானை இறந்து கிடப்பதை கண்டனர். இது குறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் (பொ) சுதாகர், வனச்சரக அலுவலர் சிவக்குமார், வன உதவி கால்நடை மருத்துவர் சதாசிவம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடந்தது. கால்நடை மருத்துவர் யானையின் உடலை உடற்கூராய்வு செய்தார். யானையின் இறப்பிற்கான காரணத்தை கண்டறிய யானையின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து யானையின் உடல் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவாக அப்படியே வனப்பகுதியில் விடப்பட்டது.

The post பவானிசாகர் வனப்பகுதியில் யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar forest ,Sathyamangalam ,Sathyamangalam Tiger Reserve ,Dinakaran ,
× RELATED தமிழக- கர்நாடக மலைப்பாதையில் சாலையில்...