×

கக்கன் பிறந்தநாள் விழா

குமாரபாளையம், ஜூன் 19: குமாரபாளையம் அருவங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில், சுதந்திர போராட்ட தியாகி கக்கன் பிறந்தநாள் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் லோகசுந்தரி விழாவிற்கு தலைமை வகித்து பேசினார்.
தமிழாசிரியர் கலைச்செல்வி தியாகி கக்கனின் பெருமைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

கக்கன் சிறப்புகளை விளக்கும் வகையில் பேச்சுபோட்டி, கட்டுரை போட்டி, வினாடி- வினா ஆகியவை நடத்தப்பட்டது. விடியல் ஆரம்பம் அறக்கட்டளை தலைவர் பிரகாஷ் பள்ளி குழந்தைகளை பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் சரவணன், ஷோபனா, அறக்கட்டளை நிர்வாகிகள் தீனா, உதவி கரம் அங்கப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.

The post கக்கன் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Tags : Kakan ,Kumarapalayam ,Freedom Fighter ,Martyr Kakkan ,Aruvankadu ,Government High School ,Headmaster ,Lokasundari ,Kalachelvi ,Tyagi Gakkan ,Kakkan ,
× RELATED இன்றும், நாளையும் மின் மயானம் இயங்காது