×

வருவாய் ஆய்வாளர் விபத்தில் மூளைச்சாவு உறுப்புகள் தானம்

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் மாதவசங்கர் (37). நாங்குநேரி தாலுகா முதுநிலை வருவாய் ஆய்வாளர். கடந்த 13ம் தேதி தாலுகா அலுவலகத்தில் இருந்து பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே வந்தவர் மீது பைக் மோதியதில் மாதவ சங்கருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது கல்லீரல் மதுரை தனியார் மருத்துவமனைக்கும், கருவிழிகள் மற்றும் ஒரு கிட்னி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு கிட்னி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

The post வருவாய் ஆய்வாளர் விபத்தில் மூளைச்சாவு உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.

Tags : Madhavashankar ,Nellai Palayangottai ,Nanguneri ,Taluk ,Senior Revenue Inspector ,Madhav Shankar ,Dinakaran ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு...