×

ரூ.2 லட்சம் லஞ்சம்: இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல் நிலையத்தில் 2023ல் இன்ஸ்பெக்டராக பனியாற்றியவர் ராஜேந்திரன் (55). இவர் தற்போது திருச்சி மாவட்டம் தொட்டியம் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். விராலிமலை அருகே பொருவாய் கிராமத்தில் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த ராஜ்குமாருக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதில் அவருக்கும், நிலத்தரகர்களுக்கும் ஏற்பட்ட பிரச்னையில் விராலிமலை காவல் நிலையத்தில் 2023 மார்ச் 17ம்தேதி புகார் அளிக்கப்பட்டது.

இதில் ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க இன்ஸ்பெக்டர் ரூ.2லட்சம் லஞ்சமாக பெற்றுள்ளார்.இதுதொடர்பாக கடந்த 2023 அக்.4ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. குற்றச்சாட்டு உறுதியானதால் நேற்று இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரூ.2 லட்சம் லஞ்சம்: இன்ஸ்பெக்டர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Pudukkottai ,Rajendran ,Viralimalai Police Station ,Pudukkottai District ,Trichy District ,Rajkumar ,Chengalpattu district ,Orapakatta ,Poovai ,Viralimalai ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு..!!