×

சென்னை ரயிலில் போலி டிடிஆர் கைது

மதுரை: சென்னை தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் அந்தியோதயா அதிவிரைவு ரயில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டது. நேற்று காலை 6.10 மணிக்கு திருச்சியை அடைந்தது. அங்கு டிக்கெட் பரிசோதகர் உடையில் ஏறிய நபர், பயணிகளிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதனை செய்து உள்ளார். அதே ரயிலில் மதுரை கோட்டத்தின் தலைமை பயணச்சீட்டு ஆய்வாளர் சரவணசெல்வியும் பயணித்துள்ளார்.

அவர் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்ட நபரிடம், ‘‘எந்த ரயில்வே கோட்டத்தில் பணிபுரிகிறீர்கள்’’ என் கேட்டுள்ளார். பின்னர் அந்த நபரின் அடையாள அட்டைகளை வாங்கி பார்த்தபோது, அவரிடம் இருந்தது போலி அடையாள அட்டை என்பது தெரியவந்தது. இதையடுத்து மதுரை ரயில் நிலைய போலீசாரிடம் சரவணசெல்வி அந்நபரை ஒப்படைத்தார். விசாரணை யில், பிடிபட்டவர் மணிகண்டன், கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

The post சென்னை ரயிலில் போலி டிடிஆர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madurai ,Antiodaya High Speed ,Chennai Tambarat ,Nagargo ,Tambaram ,Trichy ,DDR ,Dinakaran ,
× RELATED சென்னை, மதுரை, கோவையில் பணிபுரியும்...