×

ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்த அதிமுக மாஜி மேயர் உறவினர் தற்கொலை

சேலம்: சேலம் சூரமங்கலம் ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் கார்த்திக் ரகுநாத் (29). அதிமுக முன்னாள் மேயர் சவுண்டப்பனின் உறவினர். இவரது மனைவி ஐஸ்வர்யலட்சுமி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் கடந்த 12ம் தேதி 2வதாக ஐஸ்வர்ய லட்சுமிக்கு மீண்டும் ஒரு குழந்தை பிறந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் மருத்துவமனைக்கு சென்று குழந்தையை பார்த்து விட்டு கார்த்திக் ரகுநாத் வீடு திரும்பினார். இதையடுத்து நேற்று அவர் மனைவியின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. சூரமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில், கார்த்திக் ரகுநாத், ஷேர்மார்க்கெட்டில் பணத்தை இழந்துள்ளார். இதன் மூலம் அவருக்கு கடன் தொல்லை இருந்துள்ளது. இதனால், தனது தந்தை தனசேகரனிடம், வீட்டை விற்று பணத்தை தரும்படி கேட்டுள்ளார். அவர் மறுத்துவிட்டதால் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

The post ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்த அதிமுக மாஜி மேயர் உறவினர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Salem ,Karthik Raghunath ,Salem Suramangalam State Bank Colony ,Saundappan ,Aishwaryalakshmi ,Dinakaran ,
× RELATED விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்க எதிர்ப்பு