×

பீடி தர மறுத்ததால் ஆத்திரம் தலையில் கல்லை போட்டு தந்தையை கொன்ற மகன்: அம்பத்தூரில் பரபரப்பு

அம்பத்தூர்: அம்பத்தூர் அருகே பீடி தர மறுத்ததால், தந்தையின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மகனை, போலீசார் கைது செய்தனர். அம்பத்தூர், எம்கேபி நகரை சேர்ந்தவர் மகேந்திரன்(50). கூலி தொழிலாளியான இவரின் மனைவி இறந்துவிட்டார். இவருக்கு அருண் என்ற மகன் உள்ளார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டு முறையாக சிகிச்சை எடுக்காமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, மகேந்திரனின் வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது, மகேந்திரன் தலை நசுங்கி இறந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து சம்பவ இடத்திற்கு ெசன்ற அம்பத்தூர் போலீசார், மகேந்திரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரித்தனர். அதில், மனநலம் பாதிக்கப்பட்ட அருண் தனது தந்தை மகேந்திரனிடம் பீடி கேட்டுள்ளார். அதற்கு நீ ஒழுங்காக மாத்திரை சாப்பிடவேண்டும் என்று சொல்லி பீடியை கொடுக்க மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அருண், அங்கு கிடந்த பெரிய கல்லை எடுத்து மகேந்திரன் தலையில் போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அருணை கைது செய்தனர். இதையடுத்து அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post பீடி தர மறுத்ததால் ஆத்திரம் தலையில் கல்லை போட்டு தந்தையை கொன்ற மகன்: அம்பத்தூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Ampathur ,beedi ,Mahendran ,Ampathur, MKP ,Arun ,Ambattur ,
× RELATED பீடி தர மறுத்ததால் ஆத்திரம் தலையில்...