×

மாடி படிக்கட்டில் தவறி விழுந்த குழந்தை பலி

வேளச்சேரி: பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு 7 வயதில் மிருதுளா என்ற பெண் குழந்தையும், மூன்றரை வயதில் லிபின் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். கடந்த 13ம் தேதி, மாலை குழந்தை லிபின், வீட்டின் மாடிப்படியில் விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தான். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர்கள் உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

The post மாடி படிக்கட்டில் தவறி விழுந்த குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Sridhar ,Maylai Balaji ,Pallikaranai ,Velachery ,Pavitra ,Mritula ,Lipin ,
× RELATED கர்நாடகாவில் ரேணுகா சாமி கொலை...