×

பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணுகா தேசாய் ஆவேச பதிவு

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு 4வது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார். துணை முதலமைச்சராக பவன் கல்யாண் பதவியேற்றுள்ளார். இதை பவன் கல்யாணின் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில், பவன் கல்யாணை கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு எதிரான ட்ரோல்கள் அதிகரித்து வருகிறது. பவன் கல்யாணின் முன்னாள் மனைவியும், நடிகையுமான ரேணுகா தேசாய் பற்றி அதிகமான ட்ரோல்கள் வெளியாகின்றன. ரேணுகா தேசாயின் இன்ஸ்டாகிராம் பதிவுகளில், பவன் கல்யாண் ரசிகர்கள் தொடர்ந்து அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் ரேணுகா தேசாயின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு கமென்ட் செய்த பவன் கல்யாண் ரசிகர், ‘நீங்கள் சற்று பொறுமையாக இருந்திருக்க வேண்டும். கடவுள் போன்ற ஒரு வரை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள். அவரது மதிப்பை இப்போதாவது நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஆனால், குழந்தைகள் பவன் கல்யாணுடன் இருப்பது பற்றி எனக்கு மகிழ்ச்சி’ என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த ரேணுகா தேசாய், ‘துளியளவு அறிவாவது உங்களுக்கு இருந்திருந்தால், இப்படி முட்டாள்தனமான கருத்தைச் சொல்லியிருக்க மாட்டீர்கள். என்னை அப்படியே விட்டுவிட்டு மறுமணம் செய்துகொண்டது அவர்தான். நான் அல்ல. தயவுசெய்து இதுபோன்ற கமென்ட்களை தவிர்க்கவும். அவை என்னை மட்டுமே அசிங்கப்படுத்துகின்றன’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

The post பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணுகா தேசாய் ஆவேச பதிவு appeared first on Dinakaran.

Tags : Pawan Kalyan ,Renuka Desai ,Amaravati ,National Democratic Alliance ,Desam ,Janasena ,Assembly ,Lok Sabha ,Andhra ,Chandrababu Naidu ,Chief Minister ,Deputy Chief Minister ,
× RELATED நடிகர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு...