×

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு அளிக்கும் போராட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். பல்வேறு பிரச்னை தீர்த்து வைக்கக்கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து வந்துள்ளனர். இம்மனுக்கள் மீதான நடவடிக்கை இல்லாமல் ஆண்டாண்டுகளாக மாற்றுத்திறனாளிகள், அளித்த மனுவிற்காக பதில் கிடைக்கும் என காத்துக்கொண்டு வருகின்றனர்.

ஆகையால், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு நலசங்கம் சார்பில் வீடில்லாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடு வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்காக தனி பிரத்யேகமாக கோரிக்கை மனுக்களை பெற வேண்டும் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து, 300க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள், மாவட்ட கலெக்டருக்கு மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு, மனுக்களை எழுதி கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் வழங்கினர்.

The post இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு அளிக்கும் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Chengalpattu ,Collector ,Kalachelvi Mohan ,
× RELATED செங்கல்பட்டு அருகே பள்ளி வளாகத்தில் மழைநீர் குட்டை: மாணவர்கள் அவதி