×

நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் மூலம் தொழில் முனைவோர் பயிற்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை விற்பனை (ம) வேளாண்மை வணிகத்துறை சார்பில், தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம், நிலை 3ன் கீழ், கும்மிடிப்பூண்டி உபநில பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் மூலம் கும்மிடிப்பூண்டி அங்கக உழவர் உற்பத்தியாளர் நிறுவன ஊறுப்பினர்களுக்கு தொழில் முனைவோருக்கான வசதி பணிமணை பயிற்சி நடைபெற்றது.  இந்த பயிற்சிக்கு திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண்மை வணிகம்) நா.ஜீவராணி தலைமையில் தாங்கினார்.

பொன்னேரி வேளாண் வணிக அலுவலர் எஸ்.அமுதா வரவேற்றார். இந்த கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அ.சேகர், வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) எம்.தயாளன், வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ஸ்ரீதேவி, தோட்டக்கலை உதவி இயக்குநர் ம.பிரதீப்குமார், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் க.பத்மநாபன், பெடரல் வங்கி மேலாளர் எஸ்.பாலசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கம் திட்டம், வேளாண் தொழில் முனைவோர் திட்டத்தின்கீழ், வேளாண் மற்றும் உணவுப் பதப்படுத்தும் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ள வேளாண் பட்டதாரிகள், வணிகர்கள், உணவு நிறுவனங்களின் உரிமையாளர்கள், பட்டம், டிப்ளமோ, ஐடிஐ, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் தொழில் பயிற்சி பெற்றவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவன உறுப்பினர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.

இதில் வேளாண்மை (ம) உணவுப் பதப்படுத்துதல், மதிப்பு கூட்டல், சிப்பம் கட்டுதல் போன்ற வேளாண் சார்ந்த தொழில்களுக்கு கடன் உதவி பெறுவது குறித்து மண்டல வேளாண்மை நிபுனர் குமரன் விரிவாக எடுத்துரைத்தார். புதிய வேளாண் தொழில் முனைவோர்களாக இருப்பின் 40 சதவீதம் அல்லது ₹2 லட்சம் வரை மானியம் பெற முடியும். வணிக திட்டம் தயாரிப்பு, வங்கி நிதி இணைப்பு மற்றும் பிணையில்லா கடன் வசதிகள் பெறமுடியும். செயல்பாட்டில் உள்ள வேளாண் தொழில் முனேவோராக இருப்பின், 50 சதவீதம் அல்லது 5 லட்சம் மானியத்தின்கீழ் கடன் வசதி, வணிக திட்டம் தயாரிப்பு, வங்கி நிதி இணைப்பு, பெற இயலும். இப்பணிமனையில் கும்மிடிப்பூண்டி அங்கக உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் இளங்கோ, ஏழுமலை, பாஸ்கர், சுஜிதாமேரி, முதன்மை செயல் அலுவலர் அருண்பிரசாத், தயாமதி ஆகியோர் செய்திருந்தனர்.

The post நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் மூலம் தொழில் முனைவோர் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Tiruvallur District Agriculture Sales ,M) Department of Agriculture ,Kummidipoondi ,
× RELATED திருவள்ளூர் தொகுதி எம்.பி.யாக...