×

12 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராமல் 37 லட்சத்தில் கட்டப்பட்ட ஆடு அடிக்கும் தொட்டி வீண்

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த திருமழிசை பேரூராட்சியில் மாநில நெடுஞ்சாலையில் சுடுகாடு அருகே கடந்த 2012ம் ஆண்டு ₹20 லட்சம் செலவில், நவீன ஆட்டிறைச்சிக் கூடம் எனும் ஆடு அடிக்கும் தொட்டி கட்டப்பட்டது. இதன் மூலம் திருமழிசை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இறைச்சிக்கடை வியாபாரிகள் பயன்பெறும் வகையில் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் 11 ஆண்டுகளாகியும், நவீன இயந்திரங்கள் இல்லாமல் பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது. இதனால் அப்பகுதியில் புதர் மண்டி வீணாகி வந்தது.

இதனையடுத்து பேரூராட்சி நிர்வாகம் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆடு அடிக்கும் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் ₹17 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் நவீன இயந்திரங்கள் வாங்கப்பட்டு சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் சீரமைக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் ஆடு அடிக்கும் தொட்டி மீண்டும் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது. இதனால் ₹37 லட்சம் பணம் வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் ஆடு அடிக்கும் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென திருமழிசை பேரூராட்சி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post 12 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராமல் 37 லட்சத்தில் கட்டப்பட்ட ஆடு அடிக்கும் தொட்டி வீண் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Modern Mutton House ,Poontamalli ,Tirumazhisai Municipality ,Thirumazhisai ,
× RELATED கலெக்டரின் உத்தரவு காற்றில்...