×

திருவள்ளூர் செங்குன்றம் சாலை, ஈக்காடு அருகில் கிருஷ்ணா கால்வாய் கரையில் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்

திருவள்ளூர்: சென்னை மக்களி்ன் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கமாகும். இதனால் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, ஆந்திர மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா நீர் பூண்டி நீர்தேக்கத்தில் சேமித்து வைக்கப்படுகிறது. இங்கு சேகரமாகும் குடிநீர், புழல் ஏரிக்கு கொண்டு செல்ல கால்வாய் கட்டப்பட்டு உள்ளது.திருவள்ளூர் செங்குன்றம் சாலை, ஈக்காடு அருகில் கால்வாயை ஒட்டியுள்ள இடத்தில், சிலர் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் சிலரும், கால்வாய் அருகில் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், காற்றில் பறக்கும் இறைச்சி கழிவு மற்றும் குப்பை, கால்வாயில் விழுந்து விடுகிறது. இதனால், சென்னைக்கு பயன்படுத்தப்படும் குடிநீர் அசுத்தமடைந்து வருகிறது. எனவே, கிருஷ்ணா கால்வாய் அருகில் இறைச்சி கழிவு மற்றும் குப்பை கொட்டுவதை, நீர்வள ஆதாரத்துறையினர் தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post திருவள்ளூர் செங்குன்றம் சாலை, ஈக்காடு அருகில் கிருஷ்ணா கால்வாய் கரையில் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur Senggunram road ,Ekkadu ,Krishna canal ,Tiruvallur ,Poondi Sathyamurthy Reservoir ,Chennai ,Krishna ,Andhra ,Bundi Reservoir ,Puzhal Lake ,Tiruvallur Sengunram Road, Ekkadu ,
× RELATED கோயில் உண்டியல் உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது