×

காதலிக்க மறுத்ததால் மாணவிக்கு கொலை மிரட்டல்

அம்பத்தூர்: முகப்பேர் பகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி, ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: இன்ஸ்டாகிராம் மூலம் கொரட்டூர் அக்ரகாரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார்(29), நட்பாக பழகினார். பின்னர், அவரது பழக்க வழக்கம் சரியில்லாததால், ஒரு மாதத்துக்கு முன்பு அவரது நட்பை முறித்துக் கொண்டேன். இதனால் விஜயகுமார் தினமும் நான் கல்லூரிக்கு செல்லும்போது பின்தொடர்ந்து வந்து தன்னை காதலிக்கும்படி மிரட்டுகிறார். இதுபற்றி எனது தந்தையிடம் கூறினேன். இதனால், எனது தந்தை என்னை கல்லூரிக்கு அழைத்து சென்று வருகிறார்.

அதன்படி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு தந்தையுடன் பைக்கில் சென்றபோது, எங்களை விஜயகுமார் வழிமறித்தார். இதை தட்டிக்கேட்ட எனது தந்தையை தாக்கிவிட்டு தப்பினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறி இருந்தார். அதன்பேரில், விஜயகுமாரை பிடித்து, ஆபாசமாக பேசுதல், தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துவது, பெண்னை மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல் உட்பட 9 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post காதலிக்க மறுத்ததால் மாணவிக்கு கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Ampathur ,Mukappher ,JJ Nagar police station ,Vijayakumar ,Agrakaram ,Koratur ,Instagram ,
× RELATED கோயம்பேடு பார்க்கிங் பகுதியில் ஆம்னி...