×

புனே அருகே முன்விரோதத்தால் ஆவேசமாக காரை ஓட்டி பெண்ணை கொல்ல முயன்ற 17 வயது சிறுவன் கைது..!!

புனே: புனே அருகே முன்விரோதத்தால் ஆவேசமாக காரை ஓட்டி பெண்ணை கொல்ல முயன்ற 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். மராட்டிய மாநிலம் புனேவில் கடந்த மே 19ம் தேதி மதுபோதையில் 17வயது சிறுவன் காரை ஓட்டி இருவரை கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு 17வயது சிறுவன் அதிவேகமாக காரை இயக்கி பெண் ஒருவரை கொல்ல முயன்ற சம்பவம் புனே அருகே நடந்துள்ளது.

வட்கான் கெனந்த் கிராமத்தில் அதிவேகமாக காரை ஓடிவந்த 17வயது சிறுவனை அப்பகுதி மக்கள் தடுத்தி நிறுத்தியுள்ளனர். இதனால் தனது காரை 100 மீட்டர் பின்னோக்கி ஓட்டி சென்ற சிறுவன் திடீரென அதிவேகமாக முன்னோக்கி இயக்கினார். சிறுவனின் கார் அதிவேகத்தில் வருவதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தலை தெறிக்க ஓடிய நிலையில் அந்த கார் பெண் மீது மோதியது. இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு காருடன் சிறுவன் தப்பி ஓடினார். விபத்து தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

The post புனே அருகே முன்விரோதத்தால் ஆவேசமாக காரை ஓட்டி பெண்ணை கொல்ல முயன்ற 17 வயது சிறுவன் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Pune ,Pune, Maharashtra ,
× RELATED புனே கார் விபத்து வழக்கில் சிறுவனுக்கு ஜாமின் வழங்கியது மும்பை ஐகோர்ட்..!!