×

ஹெர்ப் சிக்கன் ஃப்ரை

தேவையானவை:

சிக்கன் – 500 கிராம்
கொத்தமல்லி இலை – 1 கப்
புதினா இலை – 1 கப்
கறிவேப்பிலை – 1/2 கப் பேக்
பச்சை மிளகாய் – 7 முதல்
இஞ்சி – 2 டீஸ்பூன் விழுது
பூண்டு – 2 விழுது
தயிர் – 1/2 கப்
கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
அரிசி மாவு /- 1/2 கப்
எண்ணெய்
உப்பு

செய்முறை:

மிக்ஸரில் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்ட், ஆகியவற்றை சேர்த்து அடித்துக் கொள்ளவும். மையாக அரைத்ததும் அதனுடன் தயிர் எலுமிச்சை சாறு, உப்பு, கரம் மசாலா ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும். பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை அதனுடன் சேர்த்து நன்றாக கலந்து அரிசி மாவு சேர்த்து கிளறி சிறிது நேரம் ஊற விடவும்.. பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

 

 

The post ஹெர்ப் சிக்கன் ஃப்ரை appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?