×

எலி செத்த எண்ெணயை சமையலுக்கு பயன்படுத்தியதால் மயிலாப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு வாந்தி மயக்கம்: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி

சென்னை: எலி செத்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூதாட்டி உட்பட 8 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூர் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னக்குழந்தை(88). இவர் தனது மகன், பேர பிள்ளைகள் என 8 பேருடன் வசித்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் ஒருவரின் இறப்புக்கு சென்று விட்டு வந்தனர்.

வழக்கம் போல் நேற்று இரவு சமையல் செய்து குடும்பத்துடன் சாப்பிட்டனர். பிறகு சமையல் எண்ணெய் கேனை ஏதேச்சையாக பார்த்த போது, கேனில் எலி ஒன்று இறந்து அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அதேநேரம் உணவு சாப்பிட்ட மூதாட்டி சின்னக்குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினரை சேர்ந்த ஹேமந்த், ஸ்ரீஹேமந்த் சாய், மணிகண்டன், பிரியா, விமலா, சரண், விமல் ராஜ் ஆகிய 8 பேருக்கும் அடுத்தடுத்து வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மூதாட்டி உட்பட 8 பேரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அனைவருக்கும் டாக்டர்கள் விஷ முறிவு மருந்து அளித்து சிகிச்சை அளித்தனர். அதில் 4 பேர் வீடு திரும்பினர், மற்றவர்கள் மருத்துவமனையில் உள் நோயாளிகளான அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மயிலாப்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post எலி செத்த எண்ெணயை சமையலுக்கு பயன்படுத்தியதால் மயிலாப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு வாந்தி மயக்கம்: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Mylapore ,Rayapetta Government Hospital ,CHENNAI ,Ganesapuram, Mylapore, Chennai ,
× RELATED காவல் நிலையம் முன்பு இளைஞர் தற்கொலை முயற்சி