ஊட்டி, ஜூன் 18: ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது. ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஊட்டியில் உள்ள பெரிய பள்ளிவாசல் இமாம் சுல்தான் ஆலம் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. தொடர்ந்து, காந்தல் ஜாமியா பள்ளிவாசல், அஹ்லே ஹதீஸ் பள்ளி வாசல், பெடரேசன் பள்ளி வாசல், முஹம்தியா பள்ளி வாசல், கார்டன் பள்ளி வாசல், புளூமவுண்டன் தமுமுக பள்ளிவாசல், தலைகுந்தா பள்ளி வாசல், பிங்கர்போஸ்ட் பள்ளி வாசல், மர்கஸ் பள்ளி வாசல், மேரிஸ் ஹில் பள்ளி வாசல், பாம்பே கேசில்பள்ளி வாசல் மற்றும் சாராள பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடந்தது.
இதில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஒருவருரை ஒருவர் கட்டித்தழுவி சமாதானம் தெரிவித்துக் கொண்டனர். ஆடுகளை குருபானி செய்து, ஏழை எளிய மக்களுக்கு தானமாக வழங்கினர். மேலும், இனிப்புக்களையும் வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டனர். இதேபோன்று குன்னூர், கூடலூர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில், ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
The post பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஊட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை appeared first on Dinakaran.