×

எஸ்எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்ற 22 போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

 

திருவாரூர், ஜூன் 18: திருவாரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.ஐ ஆக பதவி உயர்வு பெற்ற 22 போலீசாருக்கு எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறையில் கடந்த 1999ம் ஆண்டு 2ம் நிலை காவலர்களாக பணிக்கு சேர்ந்து 2009ம் ஆண்டு முதல் நிலை காவலர்களாகவும், 2014ம் ஆண்டு தலைமை காவலர்களாகவும் பணிபுரிந்து 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த 22 போலீசாருக்கு எஸ்.எஸ்.ஐ ஆக பதவி உயர்வு வழங்க தஞ்சை சரக டி.ஐ.ஜி ஜியாவுல்ஹக்கிற்கு திருவாரூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரை செய்து அறிக்கை அனுப்பி வைத்தார்.

அதன்படி, 22 போலீசாரின் பணிபதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு எஸ்.எஸ்.ஐ ஆக பதிவு உயர்வு வழங்க டி.ஐ.ஜி உத்தரவிட்டார். இதன்பேரில் திருவாரூர் உட்கோட்டத்தில் 6 போலீசாரும், நன்னிலத்தில் 2, மன்னார்குடியில் 3, திருத்துறைப்பூண்டியில் 5, முத்துப்பேட்டையில் 2, மாவட்ட ஆயுதபடையில் 4 போலீசார் என மொத்தம் 22 போலீசாரும் எஸ்.எஸ்.ஐ ஆக பதிவு உயர்வு பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த 22 போலீசாரையும் எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டியுள்ள நிலையில், பொது மக்களின் நலனை காப்பது, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல், சட்டம் மற்றும் ஒழுங்கை தமது கடமையாக கொண்டு பணியில் ஈடுப்பட்டு மேலும் பதவி உயர்வு பெற்றிட வேண்டும் என்றும் எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

The post எஸ்எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்ற 22 போலீசாருக்கு எஸ்பி பாராட்டு appeared first on Dinakaran.

Tags : SP ,Tiruvarur ,Jayakumar ,SSI ,Tiruvarur district ,Tamil Nadu Police ,
× RELATED போதை பொருட்கள் தடுப்பு: மாணவர்களிடம் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி