×

புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை அனுமதியின்றி வேகத்தடை அமைப்பு

 

புதுக்கோட்டை, ஜூன் 18: புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை அனுமதியில்லாமல் பல்லவேறு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, மருத்துவமனை போன்ற மக்கள் நடமாடும் பகுதிகளில் வாகனங்களின் வேகத்தை குறைக்க வேகத் தடைகள் அமைக்கப்படுகின்றன. வேகத் தடைகள் இருக்கும் இடத்தில் எச்சரிக்கை போர்டு, வேகத் தடைகள் மீது ஒளிரும் வெள்ளை பெயின்ட் அடிக்க வேண்டும் என்பது விதிகள்.

சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் இது எதையும் கடை பிடிக்காமல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், வேகத்தடைகள் அமைக்கப்படுகின்றன. விபத்தை குறைக்க வேண்டிய வேகத் தடைகளால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கீழே விழுகின்றனர். ஒரே தெருவில் 6 முதல் 8 வேகத் தடைகள் அமைக்கப் பட்டுள்ளன. அனுமதியின்றி விதிகளை பின்பற்றாமல் திடீர் என இரவில் வேகத்தடைகளை அமைக்கின்றனர்.

ஊராட்சி நிர்வாகம் இரவு பணி முடிந்து வீடு திரும்பும் தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று கீழே விழும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதை ஊராட்சி நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை. வார்டு வார்டாக குழுக்கள் அமைத்து தேவையில்லாத மற்றும் அனுமதி யின்றி அமைக்கப்பட்ட வேகத் தடைகளை அகற்ற வேண்டும். மீண்டும் அமைக்காமல் இருக்க கண்காணிப்பு அவசியம் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை அனுமதியின்றி வேகத்தடை அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Pudukottai district ,Pudukottai ,
× RELATED கந்தர்வகோட்டை பகுதியில் பின் குறுவை நடவுக்கு நாற்று பறிக்கும் பணி