×

பெரம்பலூரில் சிசிடிவி கேமரா பொருத்துதல் இலவச பயிற்சி

 

பெரம்பலூர், ஜூன் 18: பெரம்பலூர் மாவட்ட கிராம பஞ்சாயத்துகளைச் சேர்ந்த ஆண்களுக்கான சிசிடிவி கேமரா பொருத்துதல் மற்றும் சர்வீஸ் செய்தலுக் கான 13நாள் இலவசப் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் ஆனந்தி தெரிவித்திருப்பதாவது:

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம், பெரம்பலூர் மாவட்ட கிராம பஞ்சாயத்துகளைச் சேர்ந்த ஆண்களுக்கு சிசிடிவி கேமரா பொருத்துதல் மற்றும் சர்வீஸ் செய்வதற்கான 13 நாள் இலவச பயிற்சி வழங்கப் படுகிறது. இந்தப் பயிற்சியில் சிசிடிவி கேமரா நிறுவல், வால் மவுண்ட், சீலிங் மவுண்ட், ஆட்டோ ஸ்கேன், கேமரா பவர், பேக் லைட், காம்பென் சேஷன், ஐ.சி.ஆர், டிஜிட்டல் ஜூம், போகஸ் மூட், ஐரிஸ் மூட், ஒயிட் பேலன்ஸ் மூட், ஆட்டோ குரூஸ், ஆன் ஸ்கிரீன் டிஸ்ப்ளே,

ஃபோகஸ் செட், ஆட்டோ ஒயிட் பேலன்ஸ், ஆட்டோ எக்ஸ்போசர், சிசிடிவி கேமராவின் பராமரிப்பு, ஸ்மோக் டிடெக்டர் மற்றும் பாதுகாப்புஅலாரம் அமைத் தல் பற்றி விரிவாகவும், நேர்த்தியுடனும், சிறந்த வல்லுநர்களால் கற்றுத் தரப்படஇருக்கிறது. காலை, மாலை தேநீர் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங் கப்படும். பயிற்சியின் முடி வில் பயிற்சிக்கான சான் றிதழ் வழங்கப்படும். வங்கி கடன் பெற்று தொழில் தொடங்க ஆலோசனை வழங்கப்படும்.

இந்தப் பயிற்சியில் சேருவதற்கு விண்ணப் பிக்க இன்று(18ம்தேதி) கடைசி நாளாகும். பயிற்சியில் சேர விரும்புவோர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், முதல் தளம், சுப்பிரமணியம் காம்ப்ளக்ஸ், எளம்பலூர் ரோடு, பெரம்பலூர்-என்ற முகவரியில் நேரிலோ 8489065899 மற்றும் 9488840 328 ஆகியசெல்போன் எண் களிலோதொடர்புகொண்டு விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க நேரில் வரும்போது தங்களது ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு நகல், 100நாள் வேலை அட்டை நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர் ஆனந்தி வெளி யிட்டுள்ள அறிவிப்பிலே தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூரில் சிசிடிவி கேமரா பொருத்துதல் இலவச பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Indian Overseas Bank ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தில் முறைகேடாக மது விற்ற நபர் கைது