×

கரூர் ரயில் நிலையம் வழியாக வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

 

கரூர், ஜூன் 18: வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டமாக கரூர் ரயில் நிலையம் வழியாக மதுரை நோக்கிச் சென்றது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கரூர் ரயில்வே நிலையம் வழியாக, மதுரை பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கடந்த இரண்டு நாட்களாக மதுரையில இருந்து கரூர் வழியாக பெங்களுருக்கும், பெங்களுரில் இருந்து கரூர் வழியாக மதுரைக்கும் என இரண்டு முறை வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டமாக நேற்று இயக்கப்பட்டது. மதுரை-பெங்களுர் இடையே கரூர் ரயில்வே நிலையம் வழியாக சோதனை ஓட்டமாக சென்ற இந்த வந்தே பாரத் ரயிலை, பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

The post கரூர் ரயில் நிலையம் வழியாக வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Vande Bharat ,Karur railway station ,Karur ,Madurai ,Tamil Nadu ,Vande ,Dinakaran ,
× RELATED டெல்லி – வாரணாசி வந்தே பாரத் ரயிலில்...